ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு -போலீசார் விசாரணை

தலைமறைவாக உள்ளவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Dec 1, 2023 - 16:00
Dec 1, 2023 - 19:12
ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு -போலீசார் விசாரணை

புதுச்சேரி பங்கூர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற வாலிபரை போலீசார் சிசிடிவி பதிவுகளைக்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனுார் அடுத்த பங்கூரில் நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் சங்கர் ஒயின்ஷாப்பை நடத்தி வருகின்றார். இந்த ஒயின்ஷாப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு பைக்கில் வந்த வாலிபர் , கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் ஷெட்டர் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றார்.

ஷெட்டர் மீது விழுந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியதும்,கடை உள்ளே மது அருந்தி அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.வெடிகுண்டு வெடித்ததில், கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்ததில் அரியூர் பகுதியை சேர்ந்த செல்வா என்பது தெரியவந்தது. இதையடுத்து அடுத்து செல்வாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow