Smoke biscuit விவகாரம்.. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை.. விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து

உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. திரவ வாயுவை எந்த வடிவிலும், எந்த வகையான உணவுப் பொருட்களிலும் கலந்து,விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு ரூ. 2லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 26, 2024 - 16:04
Apr 26, 2024 - 18:36
Smoke biscuit விவகாரம்.. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை.. விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடித்த வீடியோ காட்சி வெளியானது. இதையடுத்து, தமிழக உணவு பாதுகாப்புத்துறை, அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.

மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் சதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவுப் பொருட்களின் தரங்கள் மற்றும் உணவுச் சேர்மங்கள்) ஒழுங்குமுறைகள், 2011-ன் (இனி உணவுச் சேர்மங்கள் விதி என்று பதிவு செய்யப்படும்) விதி 3.1.1(4)-ன் படி, உணவுச் சேர்மம் என்பது பொதுவாக உட்கொள்ளப்படாத மற்றும் உணவின் பொதுவான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படாத அதேவேளையில் அட்டச்சத்து மதிப்பு உள்ளதோ இல்லையோ. உற்பத்தி, பதப்படுத்துதல். தயரித்தல், சிகிச்சை, பேக்கிங், பேக்கேஜிங், போக்குவரத்து போன்ற தொழில்நுட்ப நோக்கத்திற்காக மட்டுமே உணவில் அறிந்தே சேர்ப்பது ஆகும்.

அதே சமயத்தில், மேற்கூறிய உணவுச் சேர்மங்கள் விதியின் விதி 3.1.18)(a) & (c) மற்றும் 3.1.1(9)-ன் படி, உணவுச் சேர்மமானது விரும்பிய விளைவை அடைய கூடுமானவரை மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்துதல் வேண்டும் மற்றும் அவை உணவுத் தரம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அ ைநிரணயிக்கப்பட்ட தரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்பின்புலத்தில், மேற்கூறிய உணவுச் சேர்மங்கள் விதியின் பிள்விணைப்பு- A-ன் இணைப்:-1-ல்- GMP அட்டவணையில், நைட்ரஜன் (INS: 941) என்பது உணவுச் சேர்மமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. நுரைக்கும் காரணியாகவும், பொட்டலமிரும் வாயுவாகவும், உந்துசக்தியாகவும் நைட்ரஜன் (INS: 941) பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் சமீப காலங்கில் மேற்கூறிய உணவுச் சேர்மங்கள் விதியல் நைட்ரஜன் என்ற உணவுச் சேர்மத்தினைக் சமைத்த உணவு போன்ற உடனடி அனுமதி வழங்கப்படாத பிஸ்கட் (உணவு வகை எணி 7.2.1) உண்ணக்கூடிய உணவு வகைகளிலும், நைட்ரஜன் என்ற உணவுச் சேர்மம் கலந்து நுகர்வோர்களுக்கு உடனடியாக உண்பதற்கு விற்பனை செய்யப்படுவதாக அறியப்படுகின்றது.

நைட்ரஜன் (INS 941) என்ற உணவுச் சேர்மத்தினைக் கலக்கும் போது ஏற்படும் குளிர்ந்த ஆவியனை தவறுதலாக கவாசிக்கும்பட்சத்தில், மூச்சுத்திணறல் ஏற்படவும், உட்கொள்ளும் பட்சத்தில் வயிற்றுப்பகுதியில் அழுத்தம் அதிகரித்து, மோசமான பாதிப்பை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2005- பிரிவு 32(3) / உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு ஒழுங்குமுறைகள், 2011- AF 2.1.3(4)-ம் குறிப்பிட்டுள்ள அதிகாரப் பின்புலத்துடன், அதே சட்டத்தின் பிரிவு 36(3)6)- கீழ் உள்ள அதிகாரத்தினைப் பிரயோகித்து சென்னை மாவட்ட குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து நுகர்வோர்களின் பொது பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் சென்னை மாவட்டத்தில், மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிடுள்ள உணவுப் பொருட்களை தயாரிக்க அல்லது பதப்படுத்தி பொட்டலமிட மட்டும் உணவு பாதுகாப்புத் துறையின உரிமம் பெற்றவர்களைத் தவிர, வேறு எந்த வணிகரும், நைட்ரஜன் (INS: 941) என்ற உணவுச் சேர்மத்தினை திரவ வாயு உள்ளிட்ட எந்த வடிவிலும், எந்த வகையான உணவுப் பொருட்களிலும் கலந்து, உணவுப் பொருட்களைத் தயாரித்து சமைத்து விற்பனை செய்ய தடைவிதித்து இதன் மூலம் உத்தரவிடப்படுகின்றது.

இவ் உத்தரவு உடனே அமலுக்கு வருவதால் மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்களை தயாரிக்க அல்லது பதப்படுத்தி பொட்டலமிட மட்டும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்றவர்களைத் தவிர, வேறு எந்த வணிகரும், நைட்ரஜன் (INS: 941) என்ற உணவுச் சேர்மத்தினைப் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்படுகின்றது. 

தவறும்பட்சத்தில் குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராக இருப்பின், அச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, வணிகத்தினை நிறுத்தி வைத்து, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 60-ன் கீழ் "சமரசத் தீர்வு" மூலம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பிரயோகித்து, அதே சட்டத்தின் பிரிவு 55, 56 மற்றும் 58-ன் கீழ், 2000/- முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். 

அதேசமயத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவராக இருந்தால், அவ் உரிமமானது ரத்து செய்யப்பட்டு, வணிகத்தினை நிறுத்தி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரூ.2,00,000/ வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. 

உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் உரிமம் இல்லாதோருக்கும் இவ் உத்தாவு பொருந்தும் ஒருவேளை, உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி உள்ள இல்லாத உணவு வணிகரிடத்தில் நைட்ரஜன் (INS: 941) என்ற உணவுச் சேர்மம் கலந்து தயாரித்த சமைத்த மேற்கூறிய அட்டவணையில்  இல்லாத எந்த வகை உணவினையாவது வாங்கி சாப்பிட்ட பின்னர், நுகர்வோருக்கு உடல்நல பாதிப்பு அல்லது மரணம் ஏற்பட்டு மேற்படி விசாரணையில் அது உறுதிசெய்யபட்டால் சம்பந்தப்பட்ட அவ்வணிகருக்கு எதிராக மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 59-ன் கீழ் தனியாகவோ அல்லது பிரிவு 3-ன் உடன் இணைத்தோ குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதுடன், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 65கீழ்  இழப்பீடு பெற்று பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதிக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வரையறைகளுக்குட்பட்டு இவ் உத்தரவானது பிறப்பிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow