குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் திறப்பு விழா-மீனவர்கள் புறக்கணிப்பு!

வருகிற 25ஆம் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை வைத்து மீனவர் நாள் நிகழ்ச்சியை அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.

Nov 15, 2023 - 13:36
Nov 15, 2023 - 13:42
குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் திறப்பு விழா-மீனவர்கள் புறக்கணிப்பு!

தூத்துக்குடி நகராட்சியின் முதல் சேர்மனாக இருந்தவர் குருஸ் பர்னாந்து. இவர் தொடர்ந்து ஐந்து முறை சேர்மாக இருந்திருக்கிறார் என்பது சிறப்பாகும். தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி நகருக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சாதனை செய்தவர். இவருக்கு ஊரின்  மையப்பகுதியில் சிலை இருக்கிறது. இருந்தாலும் அவருக்கு தூத்துக்குடியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது பரதவர் சமுதாயத்தை சேர்ந்த மீனவர்களின் கோரிக்கையாக இருந்தது.

சட்டமன்ற தேர்தலின்போது, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குரூப் பர்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். தேர்தல் நேர வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பார்க்கில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.அந்த மணிமண்டபத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு வழக்கமாக அமைக்கும் நினைவு மண்டபம் போல் குரூஸ் பர்நாந்து நினைவு மண்டபம் அமையவில்லை என்று மீனவர்கள் மத்தியில் அதிருப்தி சூழ்நிலை இருந்தது.அதை வெளிப்படுத்தும் விதமாக மணிமண்டப சிறப்பு விழா நிகழ்ச்சியை அவர்கள் கொண்டாடவில்லை. விளம்பர பதாகைகள் வைக்கவில்லை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கவில்லை. ஒரு சிலரை தவிர பெரும்பாலான மீனவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வருகிற 25ஆம் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை வைத்து மீனவர் நாள் நிகழ்ச்சியை அவர்கள் நடத்த இருக்கிறார்கள்.

-அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow