கார்த்திகை தீபம் - அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

களிமண் ஒருமுக அகல் விளக்குகள், ஐந்து முக விளக்குகள் ,ஏழு முக விளக்குகள், ஒன்பது முக விளக்குகள் அளவுக்கு ஏற்ப 2 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்படுகின்றன.

Nov 20, 2023 - 11:28
Nov 20, 2023 - 13:20
கார்த்திகை தீபம் - அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளதால் மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக கார்த்திகை தீபத்திருநாள் விளங்கி வருகிறது.அன்றைய தினத்தில் அகல் விளக்கு ஏற்றுவதால் துன்ப இருள் அகற்றப்பட்டு மகாலட்சுமி வாசம் செய்வார்கள் நம்பப்படுகிறது.இதனால் கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடுகளில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி அழகு படுத்துவார்.

கோவில்களில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். அகழ்விளக்குகள் பொதுவாக களிமண்ணால் செய்யப்பட்டு பருத்தி திரி ,நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஏற்றப்படும் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.மிக சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலையில் சாலைக்கார தெரு குயவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது இப்பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் தற்காலிகமாக அகல் விளக்கு  தயார் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை இல்லாததால் அகல் விளக்குகளை காய வைக்கும் பணிகளை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.

அகல் விளக்குகள் தயாரிப்பதற்காக முதலில் மண்ணை வெயிலில் உணர்த்துகின்றனர்.பின்னர் தேவையான நீர் மற்றும் மணல் கலந்து பக்குவப்படுத்துகிறார்கள்.அதைத்தொடர்ந்து அந்த மண்ணை மின்சாரத்தில் சுற்றும் எந்திரத்தில் இட்டு ஒரு முக விளக்கு,ஐந்து முக விளக்கு என பல்வேறு அளவுகளில் அகல் விளக்குகள் தயார் செய்கின்றனர். அதன் பின்னர் தயாரான விளக்குகளை வெயில் நன்கு காய வைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர்.

தஞ்சை மட்டும் இன்றி பிற ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மழை பெய்து ஓய்ந்தாலும் பனிமூட்டம் மேகமூட்டம் சூழலும் அகல்விளக்குகளை வெயில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .தற்போது களிமண் ஒருமுக அகல் விளக்குகள், ஐந்து முக விளக்குகள் ,ஏழு முக விளக்குகள், ஒன்பது முக விளக்குகள் அளவுக்கு ஏற்ப 2 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் அச்சு விளக்குகள் பீங்கான் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.மண் பாண்டம் தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதற்கு தமிழக அரசு தடையில்லா சான்று  தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow