திட்டக்குடி: போலீசை கத்தியால் கிழித்த கஞ்சா வியாபாரி

கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Nov 21, 2023 - 13:26
Nov 21, 2023 - 15:41
திட்டக்குடி: போலீசை கத்தியால் கிழித்த கஞ்சா வியாபாரி

திட்டக்குடி அருகே போலீசை கத்தியால் கிழித்த கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பிள்ளையார் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளத.இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் பிள்ளையார் கோயில் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க அழைத்துள்ளனர்.

அப்பொழுது திடீரென அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் சங்கரை குத்த முயன்றுள்ளார்.அதனை தடுக்க முயன்ற காவலர் சங்கருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அப்பொழுது தப்பி ஓட முயன்ற அந்த நபரை அருகில் இருந்த காவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை சோதனை செய்ததில் 20 கிராம் எடையுள்ள 15  பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow