சாலைகளில் திரிந்த மாடுகளை மடக்கிப் பிடித்த மாநகராட்சி

10க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து  அவற்றை வாகனங்களில் ஏற்றி திருவண்ணாமலையிலுள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Nov 22, 2023 - 17:21
Nov 22, 2023 - 19:33
சாலைகளில்  திரிந்த  மாடுகளை மடக்கிப் பிடித்த மாநகராட்சி

கொட்டும் மழை என்றும் பாராமல் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆலோசனையின்படி,மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள்நம்பி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பத்துக்கும் மேற்பட்ட குழுவினர் சாலைகள் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து வருகின்றனர். 

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை , காமராஜர் சாலை, தேரடி,  சின்ன காஞ்சிபுரம்,பெரியார் நகர், ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் இன்று சாலையில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை கொட்டும் மழை என்றும் பாராமல் அதிரடியாக பிடித்து  அவற்றை வாகனங்களில் ஏற்றி திருவண்ணாமலையிலுள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டவுடன் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே  கோ சாலைக்கு அம்மாடுகள் அனுப்பப்பட்டது.கொட்டும் மழையிலும் சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பிடித்துச் சென்ற செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow