இளையராஜா இசையால் வடிக்கும் காதல் ஓவியம், ‘மைலாஞ்சி!’

'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

இளையராஜா இசையால் வடிக்கும் காதல் ஓவியம், ‘மைலாஞ்சி!’
Mylanji Movie

இளையராஜா இசையால் வடிக்கும் காதல் ஓவியம், ‘மைலாஞ்சி!’

 - இளையரவி

இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற சிந்தனை, கனவு தமிழ் சினிமாவில் எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும். இயக்குநர் அஜயன் பாலாவுக்கும் அப்படி ஒரு கனவு இருந்திருக்க வேண்டும். அதற்கு சரியான சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்து காத்திருக்க, வெற்றிமாறன் அந்த ப்ராஜக்ட்டை முன்னெடுக்க சமீபத்தில் அந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடந்தது.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக் கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஸ் காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள‌து.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow