சிறுவர் சிறுகதை; பரிசு
சிறுவர் சிறுகதை

சிறுவர் சிறுகதை; பரிசு
- விஷ்ணுபுரம் சரவணன்
அமுதினி முகமெல்லாம் கேக்காக இருந்தது. பிறந்த நாள் உற்சாகத்தில் அவளோடு ஏழாம் வகுப்புத் தோழிகளின் சேட்டை தான் அது. கேக்கைத் துடைக்காமலேயே போட்டோவுக்கு போஸ் கொடுத்தாள் அமுதினி. பலரும் வாழ்த்துகளோடு பரிசுகளையும் அளித்தனர்.
அனைவரும் புறப்பட, பரிசுகளைப் பிரிக்கத் தொடங்கினாள் அமுதினி.
பிங்க் நிற பார்பி டால், பிங்க் நிற கடிகாரம், பிங்க் நிற தோடுகள், பிங்க் நிற வளையல்கள், பிங்க் நிற உடைகள் என பெரும்பாலான பரிசுகள் பிங்க் நிறத்திலேயே இருந்தன. அவளுக்கு பிடித்த நிறங்களில் பிங்க் இல்லை. பரிசு எல்லாமே எந்தப் பரிசும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவே இல்லை.
அமுதினிக்கு கார் பந்தயம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரேஸ் கார்களைப் பற்றி அவள் சொல்லும் புதுப்புது தகவல்களைக் கேட்டு அவளின் தோழிகளே வியப்பார்கள். யாராவது ஒருவராவது ரேஸ் கார் பொம்மையைப் பரிசாகக் கொடுப்பார் என எதிர்பார்த்து ஏமாந்தே போனாள். இரண்டு மாதங்களுக்கு முன் அவள் அண்ணனின் பிறந்த நாளுக்கு ரேஸ் கார், ரேஸ் பைக் பொம்மைகள் பல பரிசுகளாக வந்தன.
”கேர்ஸ்ன்னாலே பிங்க் கலர் டாய்ஸ், அதுவும் தோடு, வளையல் மட்டும்தானா?” மெதுவாக முணுமுணுத்தாள் அமுதினி.
அடுத்த வாரம். அமுதினியின் தோழி பிரின்ஸிக்குப் பிறந்த நாள். பரிசு வாங்க அம்மாவோடு கடைக்குச் சென்றாள்.
பிங்க் பார்பி பொம்மையை அம்மா எடுக்க, பிரின்ஸிக்கு பிடித்த ரேஸ் பைக் பொம்மையை எடுத்தாள் அமுதினி. மஞ்சள் நிறத்தில் ஸ்டைலாக இருந்தது அந்த பைக்.
சின்னச் சின்ன கேள்விகள்
குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணின் பதில்கள்:
1. உலகின் முதல் கதை என்னாவாக இருந்திருக்கும்?
மனித குலத்தில் மொழி உருவான பிறகு எனில், சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு சொன்னதே முதல் கதையாக இருக்கும்.
2. கதைசொல்லிக்கும் எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?
கதாபாத்திரங்களை கற்பனையில் உலவவிடுபவர் எழுத்தாளர்.. கதாபாத்திரங்களை கண்முன் உலாவ செய்பவர் கதை சொல்லி.
3. உங்கள் கயிறு சிறார் நாவல் மக்கள் பிரதியாக 2 லட்சம் காப்பி விற்றதே... எப்படி உணர்ந்தீங்க? நட்பு பேணுவதில் சாதி, மதம் புகுந்துவிடக்கூடாது என்பதை லட்சக்கணல்கான இளம் உள்ளங்களில் பகிர முடிந்ததில் மகிழ்ச்சி. சாதியம் குறித்த உரையாடலை தொடங்க முதல் புள்ளியாக கயிறு அமைந்தது பெரு மகிழ்ச்சி.
4. சிறார் இலக்கியத்தின். உல முக்கியத்துவம் என்ன?
குழந்தைகள் தம் அக உலகில் ஆரோக்கியமான காட்சிகளையும் கதைகளையும் உருக்கிக்கொள்ள சிறார் இலக்கியமே உதவுகிறது. இதைத் தவிர்க்குபோதே அவர்க்ள் மனத்தில் வன்முறை, சகிப்பின்மை உறவுகளை பேணாமை உள்ளிட்ட ஆரோக்கியமற்ற கதைகள் முளைத்துவிடுகிண்றன.
5. எழுத்தாளர் கதைசொல்லியாகவும் இருக்கணுமா?
எல்லா எழுத்தாளர்களும் தான் எழுதவிருக்கும் கதையை அவர்களுள்ளேயே சொல்லியபிறகே எழுதத்திடங்குறார்கள். சிறார் இலக்கியத்தில் கூடுதலாக நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொல்லி விட்டு எழுதுகிறோம் அல்லது எழுதியதைச் சொல்கிறோம்.
6. சிறார் எழுத்தாளர் மன்றங்கள் ஆரம்பிக்கிறாங்களே?
சிறார் இலக்கியத்தில் கடந்த, நிகழ், எதிர்கால போக்குகள் குறித்த உரையாடலுக்கு இவை உதவுகிறது. மேலும், சிறார் படைப்பாளி எழுதுவதோடு குழந்தைகளிடம் அதைச் சேர்க்கவும் வேண்டியிருப்பதால் மன்றங்கள் அவசியமாகின்றன.
7. சிறார்களைக் கவனத்துல வெச்சிக்கிட்டு தமிழ் சினிமாவுல என்ன மாற்றம் வரணும்?
குழந்தைகளின் மனத்தில் எல்லையற்று விரிந்திருக்கும் ஃபேண்டஸி காட்சிகளைக் கோர்த்து சக உயிரியை நேசிக்கும் கதை உருவாக்கிகொள்ள உதவுவது ஒவ்வொரு சினிமா படைப்பாளியின் கடமை. வன்முறைகள் தவிர்த்து, வயதுக்கு மீறிய வசனங்களைத் தவிர்த்து தீங்கற்ற கதைகளைத் தர வேண்டும்.
8. இன்றைய சிறார்களிடம் நீங்க பார்க்கும் ப்ளஸ் மைனஸ் என்ன?
ப்ள்ஸ்: விஷூவல் மீடியா வழியே புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் காட்சிகளைக் காணவும் ஆர்வம் காட்டுவது.
மைனஸ்: டிவி, மொபைல் வழியே காட்சிகளை வெறும் பார்வையாளர்களாகப் பார்த்து கிரியேட்டிவிட்டியை தொலைத்து வருவது.
9. சிறார் டிவி சேனல்கள் பங்கு என்னவா இருக்கணும்?
சிறார் படைப்பூக்கத்திற்கு தடை போடாமல், அதை வளர்த்தெடுக்கும் விதமான நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்.10. இணையத்தில் விளையாடும் கேம்ஸ் பற்றி என்ன சொல்றீங்க. அதிக நேரம் அதில் நேரம் செலவிட்டால் நம் குழந்தைகளின் கண்களும் மூளைக்கும் மனத்திற்கும் நல்லதல்ல. இதல் குற்றவாளிகள் குழந்தைகள் அல்ல, பெற்றோர்.
விஷ்ணுபுரம் சரவணன், கவிதை, சிறுகதை, சிறார் இலக்கியம் உள்ளிட்ட வடிவங்களில் 20 நூல்களை எழுதியவர். இவரின் 'ஒற்றைச் சிறகு ஓவியா' எனும் நூலுக்கு சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






