சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்... ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

சீர்காழி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்... ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையும் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ராஜேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சென்று கொண்டிருந்த போது, பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் சிக்கிய ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து  ராஜேஷின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காவலர் ராஜேஷ் விபத்தில் உயிரிழந்த தகவல்கள் கேட்டு, வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow