திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - பவன் கல்யாண் விரதம்

திருப்பதில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கட்ட விவகாரத்தை அடுத்து அதற்கு பரிகாரம் தேட நடிகர் பவன் கல்யாண் விரதம் மேற்கொண்டுள்ளார்.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - பவன் கல்யாண் விரதம்
pawan kalyan

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் வேளையில் இதற்கு பரிகாரமாக விரதம் மேற்கொண்டுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யான். 

திருப்பதி வெங்கடாஜலபதி கேவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. திருப்பதி என்றாலே லட்டு... லட்டு என்றாலே திருப்பதி என்று சொல்லுமளவு லட்டுக்கு அடையாளமாகவே திருப்பதி இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாங்கிச் செல்லும் ஏழுமலையானின் பிரசாதம் லட்டு. உலகப் பிரசித்தி பெற்ற இந்த லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இது இந்திய அரசியல் கலத்தில் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உலகெங்கும் வாழும் இந்துக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். 

ஏழுமலையானின் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கனத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுய். ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் இந்தக் குற்றச்சாட்டை மறுக்க சந்திரபாபு நாயுடு விரைவில் ஆதாரங்களை வெளியிடுவதாகக் கூறிய நிலையில் இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட கலங்கத்தைப் போக்க பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று கேட்டுக் கொள்ளப்பட்டது.  

இந்நிலையில், திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக விரதமிருந்து சுவாமியை வழிபடப் போவதாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று  காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்று காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow