Suriya 43: வாடிவாசல் போலவே சூர்யா 43..? அப்போ ஷூட்டிங் நடந்ததெல்லாம் பொய்யா..?!

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணைந்திருந்தது. புறநானூறு என டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக சூர்யா அறிவித்துள்ளார்.

Suriya 43: வாடிவாசல் போலவே சூர்யா 43..?  அப்போ ஷூட்டிங் நடந்ததெல்லாம் பொய்யா..?!

சூர்யாவின் கங்குவா டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இந்த டீசருக்காக சூர்யா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதேநேரம், தனது அடுத்தப் படம் பற்றி சூர்யா கொடுத்த அப்டேட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கங்குவா முடிந்ததும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2-வில் பிஸியாக இருப்பதால், அதற்குள் ஒரு படத்தில் நடித்துவிடலாம் என சூர்யா பிளான் செய்திருந்தார்.

அதன்படி, சூரரைப்போற்று மூலம் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்தார் சூர்யா. இவர்களுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா ஆகியோரும் சூர்யா 43 படத்தில் இணைந்தனர். மேலும், இந்தப் படம் 1960களில் தீவிரமாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகி வருவதாகவும் சொல்லப்பட்டது. அதோடு, மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும், விரைவில் சூர்யாவும் அதில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல், சூர்யா 43 டைட்டில் புறநானூறு என்றும் படக்குழு அஃபிஷியலாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். புறநானூறு படத்துக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது; இந்தக் கூட்டணி எப்போதும் எங்கள் மனதுக்கு நெருக்கமானது. அதனால் விரைவில் புறநானூறு படத்தை தொடங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே சூர்யாவின் வாடிவாசல் அறிவிப்பு வெளியானதோடு படம் பற்றிய எந்த அப்டேட்டும் வரவில்லை. வெற்றிமாறன் தரப்பில் கண்டிப்பாக வாடிவாசல் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது சூர்யா 43 படமும் திடீரென ட்ராப் ஆகியுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow