புதிதாக உதயமாகும் 4 மாநகராட்சிகள்... எந்தெந்த ஏரியானு தெரியுமா..?

கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாக உதயமாகும் 4 மாநகராட்சிகள்... எந்தெந்த ஏரியானு தெரியுமா..?

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் வரலாற்றுத் தலைநகராக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி ஆகிய நகராட்சிகளை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், இந்த 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow