CAA சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ்..!  காங்கிரசை எதிர்க்கும் அகதிகள்..! 

சிஏஏவுக்கு எதிரான இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸின் கருத்துகளுக்கு எதிராக டெல்லியில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

CAA சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ்..!  காங்கிரசை எதிர்க்கும் அகதிகள்..! 

சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. ஆனாலும் இச்சட்டத்தினால் இந்தியாவில் குடியிருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜகவினரும், அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருகின்றன. 

இந்த நிலையில் டெல்லியில், சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸிற்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் சென்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow