Lokesh Kanagaraj: “உங்க படத்துல Romance கிடையாது… இப்போ இப்படியா..” லோகேஷிடம் வம்பிழுத்த காயத்ரி!

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இனிமேல் ஆல்பம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் ரொமான்ட்டிக்காக வெளியானதை அடுத்து, நடிகை காயத்ரி லோகேஷ் கனகராஜ்ஜை ட்ரோல் செய்துள்ளார்.

Lokesh Kanagaraj: “உங்க படத்துல Romance கிடையாது… இப்போ இப்படியா..” லோகேஷிடம் வம்பிழுத்த காயத்ரி!

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இனிமேல் என்ற ஆல்பத்தில், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் லோகேஷ். இந்தப் பாடல் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று டீசர் ரிலீஸானது. இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனிமேல் ஆல்பம் டீசரில் லோகேஷ் கனகராஜ்ஜும் ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸ் செய்துள்ளது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாகவே தனது படங்களில் ஹீரோயின்கள் இருந்தாலும் அவர்களுக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார் லோகேஷ். அப்படியே இருந்தாலும் பாதி படத்திலேயே நாயகிகளை போட்டுத் தள்ளிவிடுவது தான் அவரது ஸ்டைல். குறிப்பாக விக்ரம் படத்தில் ஃபஹத் பாசில் ஜோடியான காயத்ரி தலையை வெட்டி கொலை செய்துவிடுவார் விஜய் சேதுபதி. இந்த சீன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரெண்டானது.  

இந்நிலையில் இனிமேல் ஆல்பத்தின் டீசரை ஷேர் செய்துள்ள காயத்ரி, லோகேஷ் கனகராஜ்ஜையும் பங்கமாக கலாய்த்துள்ளார். “உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலைய வெட்டிட்டு… இப்ப மட்டும் என்னமா..?” என்பதாக லோகேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். காயத்ரியின் இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், அவருடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜை ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஸ்ருதியுடன் லோகேஷ் ரொமான்ஸ் செய்வதை பார்த்து கடுப்பான ரசிகர்களுக்கு, இப்போது காயத்ரியும் கன்டென்ட் கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow