தேர்தல் செலவு பணத்தை ஆட்டையை போட்ட பாஜக நிர்வாகிகள்.. வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டதற்கு கொலை மிரட்டல்

மக்களவைத் தேர்தலுக்கு செலவிட்ட பணத்தை வேட்பாளர் கொடுத்த நிலையில் அதனை மண்டல நிர்வாகிகள் எடுத்து கொண்டதாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் செலவு பணத்தை ஆட்டையை போட்ட பாஜக நிர்வாகிகள்.. வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டதற்கு கொலை மிரட்டல்

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்தவர் ராமசந்திரன்(58). இவர் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக உள்ளார். 

ஶ்ரீபெரும்புத்தூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த பணம் ரூ.68,000 செலவு செய்ததாகவும் வேட்பாளர் தந்த பணத்தை மண்டல நிர்வாகிகள் எடுத்து கொண்டதாகவும் வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து உள்ளார்.

அதற்கு மண்டல செயலாளர் ஜெயக்குமார் என்னை கேட்காமல் வாட்ஸ் ஆப்பில் பகிர கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமசந்திரனை ஜெயக்குமார் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பா.ஜ.க. மண்டல தலைவர் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங் தூண்டதலில் ஜெயக்குமார் மிரட்டியதாக ராமசந்திரன் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஜவஹர் ஆம்ஸ்ட்ராங், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow