நீட் தேர்வு.. 160 கேள்விகள் செம ஈஸி.. காரணம் சொன்ன தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

200க்கு 160 கேள்விகள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு.. 160 கேள்விகள் செம ஈஸி.. காரணம் சொன்ன தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 160 கேள்விகள் இடம் பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி நடந்து முடிந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், கேட்கப்பட்ட கேள்விகளில் 103 கேள்விகள் எளிதாக இருந்தாகவும், சற்று கடினமாக 47 கேள்விகளும், மிக கடினமாக 30 கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

நீட் நுழைவுத் தேர்வினை தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வை எழுதி விட்டு வந்த மாணவர்கள் கூறும்போது, இயற்பியல் தேர்வு வினாக்கள் சற்று கடினமாக இருந்தாக தெரிவித்தனர். மேலும் உயிரியல் , விலங்கியல் பாடத்தில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்தாகவும் கூறினர். 

நீட்டில் 720 மதிப்பெண்களுக்கான தேர்வில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் 5 கேள்விகள் கூடுதலாக கேட்கப்பட்டு, 200 இடம் பெற்று வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்ற கேள்விகள் குறித்தும், எவ்வாறு இருந்தது என்பதையும் ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர். அதன்படி,  தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து 200க்கு 160 கேள்விகள் இடம் பெற்றிருக்கிறது.

அதன்படி, இயற்பியல் பாடத்தில் 50க்கு 46 கேள்விகள் இடம்பெற்று இருந்தன. வேதியியல் பாடத்தில் 50க்கு 45  கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தாவரவியல் பாடத்தில் 50க்கு 33  கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருந்தன. விலங்கியல்  பாடத்தில் 50க்கு 36  கேள்விகள் இடம் பெற்று இருந்தன. 

ஒட்டு மொத்தமாக 200க்கு, 160 கேள்விகள் தமிழ்நாடு  மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow