பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளியை நடத்துகிறார் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்..

இந்தியாவில் ஊழல் பள்ளியை பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளியை நடத்துகிறார் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்..

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அறிவியல்பூர்வமான ஊழலை செய்வது எப்படி என்ற பாடத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அத்தியாயத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியினருக்கு கற்பிப்பதாக ராகுல்காந்தி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி ED,IT சோதனை மூலம் கைப்பற்றப்படும் பணத்தை நன்கொடையாக மாற்றுவது எப்படி, நன்கொடைகள் பெற்றபின் ஒப்பந்தங்கள் விநியோகிக்கப்படுவது எவ்வாறு, வாஷிங் மெஷினில் துவைப்பதுபோல் ஊழல் கரைகளை எப்படி சுத்தம் செய்வது, புலனாய்வுத் துறைகளை பயன்படுத்தி ஜெயில்-ஜாமீன் விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதெல்லாம் அதில் விளக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். விரைவில் இண்டி கூட்டணி அரசு, பாஜகவின் ஊழல் பள்ளியை பூட்டி நிரந்தரமாக மூடும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow